மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

அசாம்: சிவன் வேடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது

அசாமில் விலைவாசி உயர்வைக் கண்டித்து சிவன் வேடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.  

News image
Updated On :10 ஜூலை 2022, 1:53 pm

அசாமில் விலைவாசி உயர்வைக் கண்டித்து சிவன் வேடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.  

அசாம் மாநிலம், நகோனில் விலைவாசி உயர்வைக் கண்டித்து பிரிஞ்சி போரா என்கிற இளைஞர் சிவன் வேடத்தில் நூதனமான முறையில் தெருக்களில் நாடகம் நடத்தினார். மேலும் அந்த இளைஞருடன் இளம்பெண் ஒருவரும் பார்வதி வேடத்தில் நாடகத்தில் நடித்தார். 

இந்நிகழ்வு இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெவித்தனர். மேலும் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் பிரிஞ்சி போராவை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். 

தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருப்பினும் அவர் ஜாமீன் உடனே வெளியே வந்தார். இதனிடையே இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்ற 2 பேரை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.