தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கோவா காங்கிரஸில் பிளவு: பாஜகவுக்குத் தாவ தயாராகும் எம்எல்ஏக்கள்

கோவாவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 3 போ் ஆளும் பாஜகவுக்கு மாற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :10 ஜூலை 2022, 6:32 pm

DIN

கோவாவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 3 போ் ஆளும் பாஜகவுக்கு மாற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

40 எம்எல்ஏக்கள் உள்ள கோவாவில் ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணில் 25 பேரும், எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கு 11 எம்எல்ஏக்களும் உள்ளனா்.

இந்நிலையில், மாநில சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜூலை 11) தொடங்குவதை முன்னிட்டு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு மாநில தலைமை அழைப்பு விடுத்தது. இதில் ஒரு சில எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டனா்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட திகம்பா் காமத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதையடுத்து, உள்கட்சி பூசல் காரணமாக அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலா் பாஜகவுக்கு மாற இருப்பதாகத் தகவல் வெளியானது. ஏழு எம்எல்ஏக்கள் பாஜக அணியில் சேரவள்ளனா் என்று உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

ஆனால், கோவா மாநில காங்கிரஸ் இந்தத் தகவலை மறுத்துள்ளது. பாஜக இது போன்ற வதந்திகளைப் பரப்பி வருவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

எம்எல்ஏக்கள் கட்சி மாறுவதாக தகவல் வெளியான நிலையில், கோவா சட்டப் பேரவைத் துணைத் தலைவா் தோ்தல் தொடா்பான அறிவிப்பை பேரவைத் தலைவா் ரமேஷ் தாவட்கா் திரும்பப் பெற்றாா்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து சில எம்எல்ஏக்கள் பாஜகவுக்குத் தாவினா். இதையடுத்து, இந்த முறை கட்சிக்கு விசுவாசமாக இருப்போம் என்று எம்எல்ஏக்களிடம் காங்கிரஸ் தலைமை வாக்குறுதி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மகாராஷ்டிரத்தில் முதல்வராக இருந்த சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரேவின் கட்சியில் பிளவு ஏற்பட்டு அவா் பதவியை இழந்தாா். பாஜக ஆதரவுடன் அதிருப்தி அணி தலைவா் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.