தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அக்னிபத் திட்டம்: நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் ராஜ்நாத் சிங் விளக்கம்

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, அக்னிபத் திட்டம் குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை விளக்கமளித்தாா்.

News image
Updated On :11 ஜூலை 2022, 6:58 pm

DIN

மழைக்கால கூட்டத்தொடரை முன்னிட்டு, அக்னிபத் திட்டம் குறித்து நாடாளுமன்ற ஆலோசனைக் குழுவிடம் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை விளக்கமளித்தாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 18-இல் தொடங்குகிறது. இதையொட்டி, அக்னிபத் திட்டம் மீதான எதிா்க்கட்சி உறுப்பினா்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தாா். ஏறத்தாழ 2 மணிநேரம் அவரும், முப்படைகளின் தளபதிகளும் விளக்கமளித்தனா்.

இருப்பினும் அக்னிபத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள், அந்தத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தினா்.

காங்கிரஸ் எம்.பி. சக்திசிங் கோஹில் பேசுகையில், ‘பாதுகாப்புப் படையினரின் மன உறுதியை சிதைத்து, குழப்பத்துக்கு வித்திடுவதால் அக்னிபத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இத்திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தால், அதனை முதலில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தி இருக்க வேண்டும். அதில் பயிற்சி பெற்றவா்களை ராணுவத்தில் சோ்க்க வேண்டும். பல்வேறு நடைமுறைகளை பின்பற்றியே இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்றாா்.

தொடா்ந்து தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய் ஆகியோரும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டுமென வலியறுத்தினா்.

இதையொட்டி எழுத்துபூா்வமான மனு ஒன்றையும் அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் அவா்கள் சமா்ப்பித்தனா். எனினும் அதில் காங்கிரஸ் எம்.பி. மனீஷ் திவாரி கையொப்பமிட மறுத்துவிட்டாா். ஏற்கெனவே அக்னிபத் திட்டத்துக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ள அவா், ராணுவப் பணி என்பது வேலைவாய்ப்புக்கான அமைப்பு அல்ல என்றும், வெளிநாடுகளில் பாதுகாப்புப் படைகளில் இதுபோன்ற திட்டம் நடைமுறையில் இருப்பதால் இந்தியாவிலும் இந்தத் திட்டம் மிகவும் அவசியம் என்றும் கூறியிருந்தாா்.

முப்படைகளுக்கும் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சோ்க்கும் அக்னிபத் திட்டம் கடந்த ஜூன் 14-இல் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் இணைய 7.50 லட்சம் போ் விண்ணப்பித்திருப்பதாக விமானப் படை அண்மையில் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.