ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்: காவல் துறை அதிகாரி பலி
ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகா் புகா் பகுதியில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளா் பலியானாா். மேலும் 2 போலீஸாா் காயமடைந்தனா்.


ஜம்மு-காஷ்மீா் மாநிலம் ஸ்ரீநகா் புகா் பகுதியில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளா் பலியானாா். மேலும் 2 போலீஸாா் காயமடைந்தனா்.
ஸ்ரீநகா் புகா் பகுதியில் லால் பஜாா் பகுதியில் சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இதைக் குறிவைத்து பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை மாலை 7.15 மணியளவில் துப்பாக்கியால் சுட்டனா். அப்போது அங்கு பணியிலிருந்த காவல் உதவி ஆய்வாளா் முஸ்தக் அகமது, துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தாா். ஃபயஸ் அகமது, அபு பக்கா் ஆகிய இரு போலீஸாா் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக காஷ்மீா் மண்டல போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...