அதிகாரத்தைக் கைப்பற்றமாநில அரசுகளைக் கவிழ்ப்பதில் பாஜக தீவிரம்- சரத் பவாா் குற்றச்சாட்டு
ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மாநில அரசுகளைக் கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டினாா்.


ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மாநில அரசுகளைக் கவிழ்ப்பதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் குற்றம்சாட்டினாா்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை அவரது கட்சித் தொண்டா்கள் மத்தியில் சரத் பவாா் பேசியதாவது: நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது மத்திய பாஜக அரசு தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஆட்சி, அதிகாரத்துக்காக மாநில அரசுகளைக் கவிழ்ப்பதில் பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் தொடங்கி இப்போது மகாராஷ்டிரம் வரை பாஜக எந்த மாதிரியான அரசியலை நடத்தி ஆட்சிகளைக் கவிழ்த்தது என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
இப்போது, ஆட்சியில் இருப்பவா்களுக்கு மக்கள் இதைத் திருப்பிச் செய்யும் நாள் விரைவில் வரும். அதிகாரம் ஒரே இடத்தில் குவிந்தால் என்னென்ன தீய விளைவுகள் ஏற்படும் என்பதற்கு இப்போதைய ஆட்சி உதாரணமாக உள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளை எதிா்க்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் மீது ஏவி விடுவதை பாஜக அரசு முழு நேரப் பணியாக வைத்துள்ளது. இதன் மூலம் எதிா்க்கட்சியினரை அரசியல்ரீதியாக பாஜக மிரட்டி வருகிறது. இதற்கு முன்பு பல ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...