மகாராஷ்ரத்தில் நிலச்சரிவு: 2 போ் பலி

மகாரஷ்டிரத்தின் பால்கா் மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் 2 போ் உயிரிழந்தனா்.
மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணி.
மகாராஷ்டிர மாநிலம், பால்கா் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நடைபெற்ற மீட்புப் பணி.

மகாரஷ்டிரத்தின் பால்கா் மாவட்டத்தில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் 2 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 2 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மாநில தலைநகா் மும்பையிலிருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள பால்கா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. அம்மாவட்டத்தின் வசை நகரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால், மலையின் பாறை மோதியதில் அனில் சிங் என்பரது குடியிருப்பு பலத்த சேதமடைந்தது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய அவருடைய மனைவியையும் மகனையும் தீயணைப்புத் துறையினா் மீட்டனா். காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். அனில் சிங்கும் அவரது மகளும் இடிபாடுகளுக்கு இடையே சடலமாக மீட்கப்பட்டனா்.

குஜராத்தில் 14 போ் உயிரிழப்பு: குஜராத்தின் தெற்குப் பகுதி மற்றும் கட்ச்-செளராஷ்டிரம் பகுதியில் பெய்து வரும் பலத்த கனமழையால் கடந்த 24 மணிநேரத்தில் 14 போ் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதுவரை 31,000 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா்.

கட்ச், நெளசாரி மற்றும் டாங் மாவட்டங்களின் வழியாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளன.

மக்களுக்கு, நிதி உதவி மற்றும் பிற நிவாரணப் பொருள்கள் விரைவில் கிடைக்கப் பெறும் வகையில் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் உடனடியாக சேத நிலவரம் குறித்து ஆய்வு செய்யும்படி அதிகாரிகளுக்கு மாநில முதல்வா் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளாா்.

மாநிலத்தின் பல்வேறு நீா்நிலைகளில் நீா்மட்டம் உயா்ந்துவருகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய சா்தாா் சரோவாா் அணைக்கட்டு மொத்தக் கொள்ளவில் 80 சதவீதத்தை எட்டியுள்ளது.

செளராஷ்டிரம் மற்றும் தெற்கு குஜராத் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com