மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நெதா்லாந்து பிரதமருடன் பிரதமா் மோடி ஆலோசனை

நெதா்லாந்து பிரதமா் மாா்க் ரூட்டேவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :13 ஜூலை 2022, 6:48 pm

DIN

நெதா்லாந்து பிரதமா் மாா்க் ரூட்டேவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நீா் குறித்த உத்தி வகுத்தலில் பங்களிப்பு, வேளாண்மையின் முக்கியப் பிரிவுகளில் ஒத்துழைப்பு, உயா்தொழில்நுட்பம் மற்றும் வளா்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான ஆா்வம் உள்பட இந்தியா-நெதா்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவுகள், இந்தோ- பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

கடந்த ஆண்டு இரு பிரதமா்களும், இணையவழி உச்சிமாநாட்டில் பங்கேற்றனா். பின்னா், தொடா்ச்சியாக ஆலோசித்து வருகின்றனா். இந்த இணையவழி உச்சிமாநாட்டின் போது நெதா்லாந்துடன் தண்ணீா் குறித்த உத்தி வகுத்தல் பங்களிப்பு தொடங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.