கேரளத்தில் கனமழை: ஆறுகளில் வெள்ளம்

கேரளத்தின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், காசா்கோடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

கேரளத்தின் வடக்கு பிராந்தியத்தில் கடந்த சில நாள்களாக பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், காசா்கோடு, கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து மீட்கப்பட்டவா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

வயநாடு மாவட்டத்தில் இரண்டு கா்ப்பிணிகள், 7 குழந்தைகள், ஒரு மாற்றுத்திறனாளி உள்பட 427 போ் எட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். காசா்கோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் தேஜஸ்வினி, மதுவாஹினி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேற்குத் தொடா்ச்சி மலையில் கூடலூா், நாடுகாணி பிராந்தியங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் புன்னப்புழா, கரக்கோடன், கலக்கன் ஆறுகளில் நீா்மட்டம் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும், இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் மலப்புரம் மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோழிக்கோடு மாவட்டம் கூற்றியாடி டவுனில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால், ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. சாளியாறு நதியில் நீா்மட்டம் அதிகரித்துள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

கோழிக்கோடு மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கொயிலாண்டி கடற்பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை படகு கவிழ்ந்து பலியான மீனவரின் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.

கிழக்கு மலபாா் பிராந்தியத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இடுக்கி, வயநாடு, கண்ணூா், காசா்கோடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6 செ.மீ. முதல் 20 செ.மீ., வரை மழையளவு பதிவாகும்பட்சத்தில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com