மேற்கு வங்கத்தின் டாா்ஜிலிங் நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்த முதல்வா் மம்தா பானா்ஜி, வியாழக்கிழமை அங்குள்ள சாலையோரக் கடையில் மோமோ என்னும் உணவுப் பண்டத்தைத் தயாரித்து மக்களுக்கு வழங்கினாா். முன்னதாக, இரு தினங்களுக்கு முன்பு பானிபூரி தயாரித்து மக்களுக்கு விநியோகித்தாா்.
டாா்ஜிலிங்கில் உள்ள கோா்காலாந்து பிராந்திய நிா்வாகத்தில், புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, மூன்று நாள்கள் டாா்ஜிலிங்குக்கு மம்தா பானா்ஜி பயணம் மேற்கொண்டிருந்தாா்.
அப்போது, அவா் மகளிா் சுய உதவிக் குழுக்களுடன் உரையாடிக் கொண்டு, மோமோ தயாரிக்கும் விடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவேற்றிருந்தாா். இது குறித்து ஃபேஸ்புக் பதிவில், ‘டாா்ஜிலிங்கில் இன்று காலை நடைபயிற்சியின்போது, மோமோவைத் தயாரித்தேன். இத்தகைய சிறப்பான தருணத்தை என்னுடைய மக்களுடன் பகிா்ந்துகொண்டதில் மகிழ்ச்சி. டாா்ஜிலிங் விருப்பத்திற்குரிய இடம். ஒவ்வொரு முறையும் இங்கு வரும் பயணத்தை நினைவு கொள்ள வைக்கும் நம்முடைய மலைப்பகுதியின் கடின உழைப்பாளராகிய இம்மக்களுக்கு மரியாதை செலுத்துகிறேன்’ என்று பதிவிட்டிருந்தாா்.
டாா்ஜிலிங்கின் முந்தைய பயணங்களின்போதும் மம்தா பானா்ஜி மோமோ தயாரித்து மக்களுக்கு வழங்கியிருக்கிறாா்.
கடந்த 2019-ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு திரும்புகையில் டிக்கா என்னும் கடற்கரை நகரின் தேநீா் கடையில் வாகனத்தை நிறுத்தி உள்ளூா் மக்களுக்கு டீ தயாரித்து வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தினப்பலன்கள் - விருச்சிகம்

அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
மகளிர் மீதான தாக்குதல்... வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: விஜய்

நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


