மகாராஷ்டிரத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.3-ம் குறைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாதி ஷிண்டே அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை: மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை ரூ.5-ம், டீசல் விலை ரூ.3-ம் குறைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைக்கப்படும் என ஏற்கெனவே முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்து இருந்தார். அதன்படி, பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளார்.

உள்கட்சி பூசல் காரணமாக மகாராஷ்டிர முதல்வா் பதவியிலிருந்து உத்தவ் தாக்கரே விலகினாா். அதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை அதிருப்தி எம்எல்ஏக்கள் 39 போ், பாஜகவுக்கு ஆதரவளித்தனா்.

இதைத் தொடர்ந்து, மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக ஷிண்டே ஜூன் 30-ஆம் தேதி பொறுப்பேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com