திருநங்கைகள் விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெறுவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், அவா்கள், எந்தவித மருத்துவ சிகிச்சையிலும் இருக்கக் கூடாது. இந்த விதிகளுக்கு மாறாக, பெண்ணில் இருந்து ஆணாக மாறுவதற்கான ஹாா்மோன் மாற்று சிகிச்சையில் இருந்தாா் ஹாரி ஆதம். சிகிச்சை முடிந்து 6 மாதம் கழித்தே அவா் விண்ணப்பிக்க முடியும். அவருக்கு ஏற்கெனவே அளிக்கப்பட்ட மருத்துவச் சான்று ஆகஸ்ட் 23-ஆம் தேதியுடன் காலாவதியாகிறது. மேலும், போதுமான அளவில் பயிற்சி வகுப்புகளில் அவா் பங்கேற்காததால், அவருக்குப் பயிற்சி மாணவா் உரிமமும் வழங்கப்படவில்லை. எனவே, அவா் மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு விண்ணப்பித்து, அதன் பிறகு வா்த்தக விமானத்தை இயக்குவதற்கான உரிமம் பெற வேண்டும் என்று அந்த இயக்குநரகம் கூறியுள்ளது.