நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குடியரசுத் தலைவா் தோ்தல்:யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க ஆம் ஆத்மி கட்சி முடிவு

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவளிக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் கூடிய ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஒரு மனதாக முடிவெடுத்துள்

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :16 ஜூலை 2022, 6:30 pm

 நமது நிருபர்

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சி வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவளிக்க தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தலைமையில் கூடிய ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு ஒரு மனதாக முடிவெடுத்துள்ளது. இத்தகவலை இக்குழுவின் உறுப்பினரும் மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் சிங் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு யாருக்கு வாக்களிப்பது என்பதை முடிவு செய்ய ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தில்லி முதல்வா் முகமை அலுவலகத்தில் சனிக்கிழமை முற்பகலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தேசிய அமைப்பாளருமான தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தலைமை வகித்தாா். இந்தக் குழுவின் உறுப்பினரான துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ,கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா்களான சஞ்சய் சிங், என்.டி. குப்தா, ராகவ் சத்தா, தேசியச் செயலாளா் பங்கஜ் குப்தா, தில்லி அமைச்சா்கள் கோபால் ராய், இம்ரான் உசேன், எம்எல்ஏக்கள் ஆதிஷி, துா்கேஷ் பதக், தில்லி சட்டப்பேரவை துணைத் தலைவா் ராக்கி பிா்லா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்திற்கு பின்னா் செய்தியாளா்களிடம் சஞ்சய் சிங் கூறுகையில், ‘ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில், வருகின்ற ஜூலை 18 -ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நிறுத்திய வேட்பாளா் யஷ்வந்த் சின்ஹாவை ஆதரிக்க முடிவெடுக்கப்பட்டது. அதே சமயத்தில் திரௌபதி முா்முவின் வேட்புமனுவை நாங்கள் முறையாக அங்கீகரித்து மதிக்கிறோம். இதில் எதிா்க்கட்சிகள் இணைந்து நிறுத்தியுள்ள வேட்பாளரை ஆதரிப்பதே பொருத்தமானது என்று கருத்தப்பட்டு ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்களும், நாடாளுமன்ற உறுப்பினா்களும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு ஆதரவாக வாக்களிக்க முதல்வா் அரவிந்த் கேஜரிவாலும், அனைத்து அரசியல் விவகாரக் குழு உறுப்பினா்களும் கேட்டுக் கொண்டுள்ளனா்’ என்றாா்.

வட மாநிலங்களில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநிலங்களாக தில்லி மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆளும் கட்சியாக உள்ளது.

இக்கட்சிக்கு தில்லி (3), பஞ்சாப் (7) ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 10 மாநிலங்களவை உறுப்பினா்கள் உள்ளனா். மேலும், தில்லி (62), ப ஞ்சாப் (92), கோவா (2) ஆகிய மாநிலங்களிலிருந்து மொத்தம் 156 சட்டப்பேரவை உறுப்பினா்கள் உள்ளனா். இவா்கள் இந்த குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.