குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜகதீப் தன்கருக்கு நிதிஷ் குமார் ஆதரவு
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.


தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஜகதீப் தன்கருக்கு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளரை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா சனிக்கிழமை வெளியிட்டார். வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கு பாஜக கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இதையும் படிக்க | யார் இந்த ஜக்தீப் தன்கர்? குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரின் பின்னணி
இந்நிலையில் பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தன்கருக்கு ஆதரவளிப்பதாக சனிக்கிழமை அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஐக்கிய ஜனதா தளம் அவருக்கு ஆதரவளிக்கும். அவருக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...