பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

News image
படம்: டிவிட்டர்/முகமது மொகிம்
Updated On :18 ஜூலை 2022, 9:09 am

DIN

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்ததாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி வேட்பாளராக திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களும், மாநில சட்டப்பேரவைகளில் எம்.எல்.ஏ.க்களும் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் ஆதரித்துள்ள யஷ்வந்த் சின்ஹாவுக்கு பதிலாக பாஜகவின் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளதாக ஒடிசாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது மொகிம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து முகமது மொகிம் கூறியதாவது:

“நாம் காங்கிரஸை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர், ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளேன். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு. மண்ணுக்காக எதாவது செய்ய வேண்டும் என்று எனது இதயத்தில் தோன்றியதையடுத்து அவருக்கு வாக்களித்தேன்” எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக வேட்பாளர் திரெளபதி ஒடிசா மாநிலத்தில் பிறந்த பழங்குடி சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.