இந்துக்களின் புனித மாதம் என்று அழைக்கப்படும் சாவன் மாதத்தின் முதல் திங்கள்கிழமையான இன்று அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
சாவன் என்றழைக்கப்படும் ஆடி மாதம் வடமாநிலங்களில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

கங்கையிலிருந்து புனித நீரெடுத்து, நடந்தே வந்து தங்களது ஊரில் உள்ள சிவன் கோயிலில் உள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம்.
கரோனா பரவல் அதிகரித்துவரும் நிலையில் பக்தர்கள் ஒன்று கூடுவதற்கும் வழிப்பாட்டிற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் கோயிலுக்குச் சென்று ஆர்வத்துடன் சிவபெருமானை வழிபாடு செய்தனர்.

அதன்படி, வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில், உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மஹாகாலேஷ்வர் கோயில், மும்பையில் உள்ள பாபுல்நாத் கோயில், தில்லியில் உள்ள கௌரி சங்கர் கோயில், உ.பி.யின் காஜியாபாத்தில் உள்ள துதேஷ்வர் நாத் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
வழிபாடுகளில் பங்கேற்க இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சிவபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாம்: ம.பி.யில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தை பாதிக்கிறதா?

ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு

பேரவையில் கட்சித் தலைவர்களின் துதிபாடல்தான் நடக்கிறது! பிரேமலதா

ஸ்லோவாக்கியா நாடாளுமன்றத் தலைவருக்கு இந்தியாவின் பாரம்பரிய உணவைப் பரிசளித்த பிரதமர் மோடி!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



