ம.பி.யில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

ம.பி.யில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 
Published on

மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் பயணிகள் பேருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர். 

ம.பி.யில் உள்ள இந்தூரில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாக்பூருக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தடுமாறி நர்மதை ஆற்றில் கவிழ்ந்தது. இந்த பேருந்தில் 30 முதல் 32 பேர் பயணித்தாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆற்றிலிருந்து மேலும் 12 பேரின் உடல்கள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் ராஜேஷ் ரஜோரா தெரிவித்தார். 

சம்பவ இடத்திற்குத் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) விரைந்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com