எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்

நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.

News image
மன்மோகன் சிங்
Updated On :18 ஜூலை 2022, 6:10 am

DIN

நாடாளுமன்ற வளாகத்திற்கு சக்கர நாற்காலியில் வந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 18 அமர்வுகளாக நடைபெறவுள்ளன. கூட்டத்தின் முதல் நாளான இன்று குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை வாக்குப்பதிவு செய்த நிலையில், அனைத்து எம்.பி.க்களும் அடுத்தடுத்து வாக்குப்பதிவு செய்து வருகின்றனர். அதேபோல், அனைத்து மாநில பேரவைகளிலும் முதல்வர்கள் உள்பட அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்களது கட்சி ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மீண்ட முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங், இன்று காலை சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

இன்று மாலை 5 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், ஆகஸ்ட் 6ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.