குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு; 99.18% வாக்குப்பதிவு

நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. அதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு: 99.18% வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தல் நிறைவு: 99.18% வாக்குப்பதிவு


புது தில்லி: நாட்டின் 15-ஆவது குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் இன்று காலை தொடங்கி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. அதில் 99.18 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் குடியரசுத் தலைவர் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்ததாகவும், தேர்தலில் 99.18 சதவீத வாக்குகள் பதிவானதாகவும் தலைமைத் தேர்தல் அலுவலர் பி.சி.மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையத்தில் 736 பேர் (727 எம்.பி.க்கள், 9 எம்எல்ஏக்கள்) வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது. அவர்களில் 730 (721 எம்.பி., 9 எம்எல்ஏக்கள்) பேர் வாக்களித்திருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், நாடு முழுவதும் தேர்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட விருக்கின்றன என்றும் கூறினார்.

இன்று நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான தேர்தலில் பாஜக கூட்டணி சாா்பில் திரௌபதி முா்முவும் எதிா்க்கட்சிகள் சாா்பில் யஷ்வந்த் சின்ஹவும் போட்டியிடுகின்றனா்.

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் என சுமாா் 4,800 வாக்காளா்கள் தோ்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் என்ற நிலையில், இவர்களில் 99.18 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பெட்டிகள் இன்று மாலையே சாலை அல்லது விமானப் போக்குவரத்து மூலம் புது தில்லி கொண்டு செல்லப்படும்.

பதிவான வாக்குகள் ஜூலை 21-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அதையடுத்து புதிய குடியரசுத் தலைவா் ஜூலை 25-ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொள்வாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com