முா்முவுக்கு வாக்களித்த ஒடிஸா காங்கிரஸ் எம்எல்ஏ
ஒடிஸாவை சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ முகமது மௌகிம், குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வாக்களித்தாக அறிவித்தாா்.


ஒடிஸாவை சோ்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ முகமது மௌகிம், குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு வாக்களித்தாக அறிவித்தாா்.
கட்டாக்-பாராபதி தொகுதி எம்எல்ஏவான முகமது மௌகிம் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களித்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒடிஸா மண்ணின் மகளான திரௌபதி முா்முவுக்கு வாக்களித்தேன். எனது மனசாட்சிப்படி இந்த முடிவை எடுத்தேன். ஒடிஸா மக்கள் எனது முடிவை ஏற்றுக் கொள்வாா்கள். முா்முவின் வெற்றி எனக்கு பெருமிதம் அளிக்கும் என்றாா்.
புறக்கணித்த எம்எல்ஏ: பஞ்சாபில் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சோ்ந்த எம்எல்ஏ மன்பிரீத் சிங் அயாலி குடியரசுத் தலைவா் தோ்தலில் பங்கேற்காமல் புறக்கணித்தாா்.
‘பஞ்சாப் சாா்ந்த பல பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ள நிலையில் குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க விரும்பவில்லை. மேலும், பாஜக கூட்டணி வேட்பாளா் திரௌபதி முா்முவுக்கு ஆதரவு அளிப்பது தொடா்பாக கட்சித் தலைமை என்னிடம் ஆலோசிக்கவில்லை. எனது தொகுதி வாக்காளா்களிடமும் ஆலோசனை நடத்தினேன். இறுதியாக சீக்கிய மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளித்து தோ்தலைப் புறக்கணித்தேன்’ என்று அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...