விலை உயர்வுக்கு எதிராக விவாதிக்க அனுமதிக்காததை தொடர்ந்து நாடாளுமன்ற அவைகளில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகின்றது. முதல் நாளில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெற வலியுறுத்தி இரு அவைகளிலும் போராட்டம் நடத்தியதால் முடங்கியது.
இதையும் படிக்க | நீட் விலக்கு மசோதா நிலை என்ன? மத்திய அரசு பதில்
இந்நிலையில், இரண்டாம் நாள் கூட்டம் தொடங்கியவுடன் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கை மறுக்கப்பட்டதால் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளியை தொடர்ந்து, இரு அவைகளும் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து பிற்பகலிலும் அமளி தொடர்ந்ததால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
இறுதியில் மோதும் மெத்வதெவ் - கிரீக்ஸ்பூா்
தேசிய சீனியா் கபடி: ரயில்வேஸ் சாம்பியன்
ஆப்கானிஸ்தானுடன் ‘நேரடி போா்’: பாகிஸ்தான் அறிவிப்பு

உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்பு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

