நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சாதியப் பாகுபாடு: யோகி அமைச்சரவையிலிருந்து அமைச்சர் ராஜிநாமா?

சாதிரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்

News image
Updated On :20 ஜூலை 2022, 2:44 pm

DIN

சாதிரீதியிலான பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி உத்தரப்பிரதேச மாநில நீர்வளத்துறை அமைச்சர் தினேஷ் காதிக் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி செய்து வருகிறது. யோகி தலைமையிலான மாநில அமைச்சரவையில் நீர்வளத்துறை அமைச்சராகப் பணியாற்றி வருபவர் தினேஷ் காதிக்.

மீரட்டில் உள்ள ஹஸ்தினாபூர் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தினேஷ் காதிக் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது பேசுபொருளான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில் அவர்,  தன்னுடைய சாதியைக் காரணம் காட்டி அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாகக் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். துறைசார் கூட்டங்களுக்கு தனக்கு தகவல் தெரிவிப்பதில்லை எனவும், தன்னுடைய உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை எனவும் தினேஷ் காதிக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தினேஷ் காதிக் தனக்கு வழங்கப்பட்டு வரும் காவல்துறை பாதுகாப்பு மற்றும் அரசு வாகனத்தையும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.