ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க் கப்பலில் தீ விபத்து
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.


இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா விமானம் தாங்கி போர்க் கப்பலில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
இதுதொடர்பாக இந்திய கடற்படை அதிகாரிகள் கூறுகையில், "கர்நாடக மாநிலம் கார்வார் கடற்பகுதியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.
கப்பலில் இருந்த தீயணைப்பு சாதனங்கள் மூலம் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து கடற்படை தலைமையகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது' என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...