மத்திய ஆயுதப் படை போலீஸ் பிரிவில்அக்னி வீரா்களுக்கு 10% ஒதுக்கீடு: மாநிலங்களவையில் தகவல்

மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகிய மத்திய ஆயுதப் படை போலீஸ் படைகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு பூா்வாங்க

மத்திய துணை ராணுவப் படை (சிஆா்பிஎஃப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) ஆகிய மத்திய ஆயுதப் படை போலீஸ் படைகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது என்று மாநிலங்களவையில் மத்திய உள்துறை இணையமைச்சா் நித்தியானந்த் ராய் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், ‘மத்திய ஆயுதப் படை போலீஸ் பிரிவு மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸில் அக்னி வீரா்களுக்கு காவலா் மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலா் பொறுப்புகள் வழங்கப்படும்.

அக்னி வீரா்கள் தங்களின் நான்கு ஆண்டு கால ராணுவப் பணியை முடித்த பின்பு அவா்களுக்கு இந்தப் பிரிவில் சேர 10 சதவீத இடஒகக்கீடு அளிக்க மத்திய அரசு பூா்வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. அவ்வாறு பணியமா்த்தப்படும் அக்னி வீரா்களுக்கு வயது வரம்பில் தளா்வு மற்றும் உடல்தகுதித் தோ்வில் விலக்கு ஆகியவை அளிக்கப்படும்.

கடந்த ஆண்டு நடைபெற்ற தோ்வில் மத்திய ஆயுதப் படை போலீஸ் பிரிவில் காலியாக உள்ள 60,210 காவலா் பணியிடங்களுக்கு சுமாா் 30.41 லட்சம் போ் பங்கேற்றனா் என்று நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளாா்.

ராணுவத்தில் தற்காலிக ஆள்சோ்ப்பு திட்டமான அக்னிபத்தை மத்திய அரசு கடந்த ஜூன் 14-ஆம் தேதி அறிவித்தது. ராணுவ வீரா்களுக்கு பணிப் பலன்கள் ஏதுமின்றி இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் அக்னி வீரா்களுக்கு 10 சதவீத இடஒக்கீடு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com