இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடியரசுத் தலைவராகிறார் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

News image
Updated On :22 ஜூலை 2022, 1:03 pm

குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடந்து வருகிறது. தொடக்கம் முதலே திரெளபதி முர்மு முன்னிலை வகித்து வந்தார். இதில் மொத்தம் பதிவான 4754 வாக்குகளில் 53 வாக்குகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 4701 வாக்குகள் வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. மொத்த வாக்குகளின் 2824 வாக்குகள் பெற்று திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு மொத்தம் 6,76,803 வாக்குகள் மதிப்பு கிடைத்துள்ளது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகள் கூட்டணியின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹ 1877 வாக்குகள் பெற்றுள்ளார். அவரின் மொத்த வாக்குகள் மதிப்பு 38,0,177

இதன்மூலம் திரெளபதி முர்மு நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவராகியுள்ளார். திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராகியுள்ளதன் மூலம் நாட்டின் முதல் பழங்குடி பெண் குடியரசுத் தலைவர் எனும் பெருமையை அவர் பெறுகிறார். 

திரௌபதி முர்முவின் வெற்றிக்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.