யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

திரிபுரா முதல்வருக்கு கரோனா பாதிப்பு

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 ஜூலை 2022, 7:20 am

DIN

திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நாட்டில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில், முக்கிய பிரமுகர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 

அந்த வகையில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் திடமுடன் நலமாக இருக்கிறேன். அறிகுறிகள் எதுவுமில்லை. என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்' என்று பதிவிட்டுள்ளார். 

சமீபத்தில் மாநிலங்களவை எம்.பி. பதவியில் இருந்து விலகிய மாணிக் சாஹா, மாநில முதல்வராக பதவியேற்றுக்கொண்டதையடுத்து, இடைதேர்தலில் வெற்றிபெற்று கடந்த ஜூலை 8 ஆம் தேதி எம்எல்ஏவாக பதவியேற்றுக் கொண்டார், முன்னதாக, திரிபுரா முதல்வராக இருந்த பிப்லவ் தேவ் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.