ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒரு மரம் வளர்த்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம்: அதிரடி அறிவிப்பு

மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ஒரு மரம் வளர்த்தால் 5 யூனிட் மின்சாரம் இலவசம்: அதிரடி அறிவிப்பு

Updated On :23 ஜூலை 2022, 10:44 am


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் கிராமப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் பொதுமக்களின் மரம் வளர்க்கும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒரு மரத்துக்கு தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் வளர்க்கப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் தலா 5 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

அதேவேளையில், பூச்செடிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும், மரம் வளர்ந்து பெரியதாகி, நிழல் தரும் வகையிலான மரங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த மாநிலத்தின் 73வது வன மகோத்சவ நிகழ்ச்சியின்போது இந்த அறிவிப்பினை ஹேமந்த் சோரன் வெளியிட்டார்.

இது குறித்து மின்துறை அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் அறிவிப்பைத் தொடர்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கான தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நமது சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. அதனை மீட்டெடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் சோரன் குறிப்பிட்டார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.