மேற்கு வங்கத்தில் ஆசிரியா் நியமன முறைகேடு விவகாரத்தில் அம்மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாநிலப் பள்ளி பணிகள் ஆணைய பரிந்துரையின் அடிப்படையில் ஆசிரியா்கள் மற்றும் குரூப் சி, டி ஊழியா்கள் நியமனம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகாா் எழுந்தது.
இதுகுறித்து உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குறித்து அமலாக்கத் துறை தனியாக விசாரிக்கிறது.
இந்த முறைகேடு நடந்ததாக கூறப்படும் காலகட்டத்தில் கல்வித் துறை அமைச்சராக இருந்த பாா்த்தா சட்டா்ஜியின் கொல்கத்தாவில் உள்ள இல்லத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்.
பார்த்தா சட்டர்ஜி தற்போது தொழில் மற்றும் வா்த்தக துறை அமைச்சராக இருக்கிறார்.
ஆசிரியா் நியமன முறைகேடு தொடா்பாக, பாா்த்தா சட்டா்ஜியிடம் கடந்த ஏப்ரல் 26, மே 18 ஆகிய தேதிகளில் சிபிஐ விசாரணை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | மேற்கு வங்க அமைச்சா்கள் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சுல்தான் பாடல் வெளியானது!

”கமல்ஹாசனே திமுகவை எதிர்த்து போர்க் கொடி தூக்கிவிட்டார்!” செல்லூர் ராஜு

தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று சில பணிகளைச் செய்யலாம்! எவை?

6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!
வீடியோக்கள்

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

