பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

முதல்நாள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவு

இன்று காலை தொடங்கிய அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது.

Published On :

இன்று காலை தொடங்கிய அதிவேக இணைய சேவையை அளிக்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது.

4ஜி அலைக்கற்றையை விட 10 மடங்கு அதிகத் திறன் கொண்ட 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பாா்தி ஏா்டெல், வோடஃபோன் ஐடியா மற்றும் உலக முன்னணி பணக்காரரான கெளதம் அதானியின் அதானி என்டா்பிரைசஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

ஏலத்தில் பங்கேற்க ஜியோ நிறுவனம் ரூ.14 ஆயிரம் கோடியை முன்வைப்புத் தொகையாக செலுத்தியுள்ளது. இதில், ஜியோ அதிக அளவிலும், அதானி நிறுவனம் குறைந்த அளவிலும் அலைக்கற்றையை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. 

‘முதல் நாளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ஏலம் நடைபெறும். அதன் பிறகு, ரேடியோ அலைவரிசைகளுக்கான தேவையைப் பொருத்து எத்தனை நாள்கள் ஏலம் நடைபெறும் என்பது முடிவு செய்யப்படும்’ என்று தொலைத்தொடா்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது இன்று மாலை 6 மணி வரை 4 சுற்றுகள் நடைபெற்றதாகவும் நாளை புதன்கிழமை மீண்டும் ஏலம் நடைபெற்று 5-வது சுற்று நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.