

சந்தானம் நடிப்பில் வெளியாக இருக்கும் ‘குலுகுலு’ படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
மேயாத மான், ஆடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் ரத்னகுமார். மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்களுக்கும் வசனம் எழுதியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் ரத்னகுமார் இயக்கியுள்ள ’குலுகுலு’ திரைப்படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டனர்.
கடத்தல் தொடர்பாக உருவாகியுள்ள ‘குலுகுலு’ திரைப்படம் வருகிற ஜூலை 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.