மும்பை: குடும்பத்துடன் தற்கொலை, 3 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி
மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.


மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மும்பை சிவாஜி நகர் பகுதியில் இந்த துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவத்தில் சஹீல் ஜலீல் கான் (34 வயது), அவரது மனைவி நசியா சஹீல் கான் மற்றும் அவரது இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிக்க: மனைவியின் தங்கையை மயக்க கணவர் இப்படியெல்லாம் செய்வாரா?
இது குறித்து காவல் துறை தரப்பில் கூறியிருப்பதாவது: “ சம்பவம் நடந்த வீட்டின் கதவு உள் பக்கமாக தாழிடப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும். காவல் துறைக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தப் பிறகு உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று பார்க்கையில் சஹீல் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் தரையிலும் இறந்து கிடந்துள்ளனர். இது தொடர்பாக காவல் துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்த அந்த 4 பேரின் உடல்களும் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...