தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

முகநூலில் வெறுப்புக் கருத்துகள் 38% அதிகரிப்பு

 முகநூலில் வெறுப்புக் கருத்துகள் வெளியிடுவது 38 சதவீதமும் இஸ்டாகிராமில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் 86 சதவீதமும்

News image
Updated On :3 ஜூன் 2022, 9:58 pm

DIN

 முகநூலில் வெறுப்புக் கருத்துகள் வெளியிடுவது 38 சதவீதமும் இஸ்டாகிராமில் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் 86 சதவீதமும் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்ததாக அந்த சமூக ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள மாதாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் முகநூலில் 53,200 வெறுப்புக் கருத்துகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் கண்டறியப்பட்ட 38,600 வெறுப்புக் கருத்துப் பதிவுகளோடு ஒப்பிடுகையில் 37.82 சதவீதம் அதிகமாகும்.

இது தவிர, இன்ஸ்டாகிராமில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் வன்முறையைத் தூண்டக் கூடிய 77,000 பதிவுகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இது, முந்தைய மாா்ச் மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்ட வன்முறையைத் தூண்டும் 41,300 பதிவுகளோடு ஒப்பிடுகையில் சுமாா் 86 சதவீதம் அதிகமாகும்.

முகநூலிலும் இன்ஸ்டாகிராமிலும் நடவடிக்கை எடுக்கப்பட்ட பதிவுகளில் பெரும்பாலானவை, மற்ற பயன்பாட்டாளா்கள் அந்தப் பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுக்கும் முன்னரே சிறப்பு செயலி மூலம் தாமாக கண்டறியப்பட்டன.

வெறுப்புக் கருத்துகள் மற்றும் வன்முறையைத் தூண்டும் பதிவுகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையில், பதிவுகளை நீக்குவது, படங்களை மறைப்பது அல்லது சிலருக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பதிவுகள் குறித்து எச்சரிக்கை விடுப்பது ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.