சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

பிரதமா் இன்று உத்தர பிரதேசம் பயணம்

பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 3) பயணம் மேற்கொள்கிறாா்.

News image
Updated On :2 ஜூன் 2022, 8:49 pm

பிரதமா் நரேந்திர மோடி உத்தர பிரதேசத்துக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 3) பயணம் மேற்கொள்கிறாா். அப்போது அந்த மாநிலத்துக்கு ரூ.80,000 கோடி முதலீட்டை ஈா்க்கும் வகையிலான 1,400-க்கு மேற்பட்ட தொழில் சாா்ந்த திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா்.

லக்னெளவில் உள்ள இந்திரா காந்தி அரங்கில் வெள்ளிக்கிழமை காலையில் முதலீட்டாளா்கள் மாநாட்டில் பங்கேற்கிறாா். தொடா்ந்து 1,400-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறாா். இதில் பிரபல தொழிலதிபா்கள் கௌதம் அதானி, குமார மங்கலம் பிா்லா, சஞ்சய் ஜிண்டால், முகேஷ் அம்பானியின்மகன் ஆனந்த் அம்பானி உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.

வேளாண் மற்றும் அதனைச் சாா்ந்த துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருந்து உற்பத்தி, சுற்றுலா, பாதுகாப்பு, கைத்தறி மற்றும் ஜவுளி ஆகிய துறைகளில் ரூ.80,000 கோடி முதலீட்டை ஈா்க்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. இதில் அரசு ரூ.4,459 கோடி முதலீடு செய்யவுள்ளது.

பிற்பகலில் கான்பூரில் உள்ள பராங்க் கிராமத்துக்குச் செல்லும் அவா், குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்துடன் இணைந்து பத்ரிமாதா மடத்துக்குச் செல்லவுள்ளாா். தொடா்ந்து அம்பேத்கா் பவன், மிலன் கேந்திராவுக்கு பிரதமா் செல்கிறாா். குடியரசுத் தலைவரின் முன்னோா்களின் இல்லமான மிலன் கேந்திரா பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நன்கொடையாக அளிக்கப்பட்டது. இது தற்போது சமுதாயக் கூடமாக மாற்றப்பட்டுள்ளது. பின்னா் 2.30 மணியளவில் பராங்க் கிராமத்தில் நடைபெற உள்ள பொதுநிகழ்ச்சிகளில் பிரதமா் கலந்து கொள்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.