டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உத்தரப் பிரதேசத்தில் ரூ.70,000 கோடி முதலீடு செய்யும் அதானி

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் ரூ,70,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

News image
அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி
Updated On :3 ஜூன் 2022, 9:34 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அதானி குழுமம் ரூ,70,000 கோடியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சுமார் 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க ரூ.70,000 கோடி முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி அம்மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அதானி ‘முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் பசுமை ஆற்றல், விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து வணிகம் உள்ளிட்டவற்றில் ரூ.11,000 கோடி அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நாங்கள் சாலை மற்றும் போக்குவரத்து கட்டுமானத்திற்கு ரூ.24,000 கோடியையும் பாதுகாப்புத் துறைகளில் ரூ.35,000 கோடியையும் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தெற்காசியாவின் மிகப்பெரிய வெடிமருந்து வளாகத்தை அமைக்க அதானி குழுமம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கௌதம் அதானி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.