யூ-டியூப் பார்த்து இதையா கற்றுக் கொள்வது? கைது செய்தது காவல்துறை
யூ-டியூப் பார்த்து இதையா கற்றுக் கொள்வது? கைது செய்தது காவல்துறை

யூ-டியூப் பார்த்து இதையா கற்றுக் கொள்வது? கைது செய்தது காவல்துறை

பழி வழங்கும் நடவடிக்கையாக, தனது பக்கத்து வீட்டுக்காரரின் மகனைக் கொல்ல, யூ-டியூப் பார்த்து வெடிகுண்டு செய்யக் கற்றுக்கொண்டு, சதிச் செயலுக்கு திட்டமிட்ட 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யூ-டியூப் பார்த்து இதையா கற்றுக் கொள்வது? கைது செய்தது காவல்துறை
மீரட்: பழி வழங்கும் நடவடிக்கையாக, தனது பக்கத்து வீட்டுக்காரரின் மகனைக் கொல்ல, யூ-டியூப் பார்த்து வெடிகுண்டு செய்யக் கற்றுக்கொண்டு, சதிச் செயலுக்கு திட்டமிட்ட 45 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் பக்பத் பகுதியைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

பக்கத்து வீட்டுக்காரரின் 17 வயது மகன் கௌதம் சிங்கின் வீட்டு வாயிலில் வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், கௌதமின் முகம் உள்ளிட்டவை மிக மோசமாக சிதைந்துபோனது. இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினருக்குக் கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

பக்கத்து வீட்டுக்காரருடன் பிரச்னை இருந்து வரும் நிலையில், கைது செய்யப்பட்டிருக்கும் ரன்வீர் சிங், யூ-டியூப் விடியோக்கள் மூலம் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதை கற்றுக் கொண்டு அதற்குரிய பொருள்களை வாங்கி வெடிகுண்டு தயாரித்து, அதனை பக்கத்து வீட்டில் வைத்து வெடிக்க வைத்துள்ளது தெரிய வந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, பல குண்டுகளை இவ்வாறு தயாரித்து, வயல்வெளிகளில் வைத்து வெடித்து பரிசோதித்தும் உள்ளார். இவரை  கைது செய்த காவல்துறையினர், வெடிகுண்டு தயாரித்ததைப் பற்றி விசாரித்த போதுதான் இந்த தகவல்கள் கிடைத்துள்ளன. அவரை எங்கள் கண் முன்னே குண்டு தயாரிக்கச் சொன்னோம். அவரும் உடனடியாக அதனைச் செய்தார். வெறும் வெடிகுண்டு தயாரிக்கும் விடியோக்களை மட்டும் பார்த்து, அவர் அதனுடன் மேலும் பல விஷயங்களை சேர்த்து ஆள்களைக் கொல்லும் அளவுக்கு பயங்கர வெடிகுண்டுகளைத் தயாரிக்கவும் கற்றுக் கொண்டிருக்கிறார்.

உடனடியாக இது குறித்து யூ-டியூப் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். இதுபோன்ற விடியோக்களை நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளோம் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com