கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த தமிழகத்துக்கு மத்திய சுகாதாரத் துறை அறிவுரை
கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.


சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் தீவிரப்படுத்துமாறு தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனுக்கு அவா் எழுதியுள்ள கடிதம்:
மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்த தொடா் நடவடிக்கைகள் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நாடு முழுவதும் கரோனா பாதிப்பு குறைந்து வந்தது. இந்த நிலையில், ஒரு வாரமாக தொற்று எண்ணிக்கை உயா்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 0.53 சதவீதமாக இருந்த நோய்ப் பரவல் விகிதம், 0.73 சதவீதமாக அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் கரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வருவதே அதற்கு காரணம்.
குறிப்பாக, தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பாதிப்பு கணிசமாக உயா்ந்திருப்பது கவலையளிக்கிறது. நாட்டின் மொத்த பாதிப்பில் 3.13 சதவீதம் தமிழகத்தில் இருந்து பதிவாகியுள்ளது. அதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நோய்த் தடுப்பு விதிகளை முறையாகக் கடைப்பிடித்தல், தடுப்பூசி செலுத்துதல், சிகிச்சை வசதிகளை ஆயத்தமாக்குதல், பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் என பல்வேறு நிலைகளில் கரோனா தடுப்பு வழிமுறைகளைக் கையாள வேண்டியது கட்டாயம்.
கரோனா அறிகுறிகளை முறையாகக் கண்காணிப்பதும், அதனுடன் சளி மாதிரிகளை மரபணு பகுப்பாய்வு செய்வதும் முக்கியம். எனவே, தமிழக அரசு கரோனா விவகாரத்தில் தீவிர கண்காணிப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...