கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்ப்டடுள்ளது. 
கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா

கர்நாடக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சுதாகருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்ப்டடுள்ளது. 

இதுகுறித்து அவர் தனது சுட்டுரை பக்கத்தில் அளித்த தகவலில், 

கரோனாவின் மூன்று அலைகளில் பாதிக்கப்படாமல் இருந்த எனக்கு தற்போது கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

எனக்கு லேசான தொற்று அறிகுறிகள் உள்ளதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். கரோனாவின் அனைத்து முன்தடுப்பு நடவடிக்கைகளையும் முறையாக பின்பற்றி வந்துள்ளேன். நான் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன் என்று அவர் வியாழன் இரவு கூறினார்.

மேலும், கடந்த சில நாள்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றார். 

இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 297 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளன. இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றாலும், நேர்மறை விகிதம் 1.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அண்டை மாநிலங்களான கேரளம், மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று திடீர் அதிகரித்து வருவதால் கர்நாடக அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com