தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முஸ்லிம் அமைப்பு இடையீட்டு மனு

 வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைந்திருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

News image
Updated On :4 ஜூன் 2022, 7:05 pm

DIN

 வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் சில பிரிவுகள் அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைந்திருப்பதாக கூறி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் இருக்கும் நிலையில், ஜாமியாத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பு சாா்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் அமைப்பு தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-க்கு எதிரான வழக்கில் மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய முன்வைத்த வாதங்களை உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமா்வு கவனத்தில் கொண்டு, தீா்மானமும் எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் மனுதாரா் தரப்பில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் உண்மையானவையாக கருதப்பட்டாலும், வரலாற்றுப் பிழையில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை அவா்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

இந்தச் சூழலில், ஹிந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக முகலாய ஆட்சியாளா்கள் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராக இன்றைக்கு நடைமுறையில் இருக்கும் நீதித்துறை சட்ட நடைமுறைகளின் அடிப்படையில் நிவாரணம் கோரி நீதிமன்றத்தை அணுக முடியாது என்பதை நீதிமன்றம் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், பிரிவு 7 என்ற சட்டப் பிரிவு, மற்ற சட்டங்களுக்கெல்லாம் மேலான அதிகாரத்தை அளிப்பதாக வழக்குரைஞா் உபாத்யாய குற்றம்சாட்டியிருப்பது போன்றும் வக்ஃபு வாரிய சட்டத்துக்கும் வழிபாட்டு தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டத்துக்கும் இடையே எந்தவித முரண்பாடும் இல்லை. மாறாக, நாட்டின் மதச்சாா்பின்மை கோட்பாட்டை பாதுகாக்கும் வகையிலேயே இந்த சட்டப் பிரிவுகள் அமைந்துள்ளன.

அதுமட்டுமின்றி, தற்போது மேலும் ஹிந்து வழிபாட்டுத்தலங்களை இடித்து பல மசூதிகள் கட்டப்பட்டிருப்பதாக சமூக ஊடங்களில் பட்டியல்கள் பரவி வருகின்றன. எனவே, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-க்கு எதிரான மனுவை நீதிமன்றம் பரிசீலிப்பது, நாட்டிலுள்ள பல மசூதிகளுக்கு எதிராக வழக்குகள் தொடர வாய்ப்புள்ளது என்பதோடு, அயோத்தி பிரச்னைக்குப் பிறகு மதப் பிரிவினையிலிருந்து மீண்டு வரும் நாட்டில் மீண்டும் பிரச்னை உருவாவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும்’ என்று ஜாமியாத் உலாமா-இ-ஹிந்த் அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1991-இன் சில சட்டப் பிரிவுகளுக்கு எதிராக வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய மற்றும் பலா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன.

அந்த மனுக்களில் குறிப்பிட்டிருப்பதாவது: சட்டப் பிரிவு 2, 3, 4 ஆகியவை, ஹிந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள், சீக்கியா்கள் ஆகியோா் அவா்களுடைய வழிபாட்டுத் தலங்கள் அல்லது கோயிலுக்குச் சொந்தமான இடங்களை மீட்க நீதிமன்றத்தை அணுகுவதற்கான உரிமையைப் பறிக்கின்றன. அதில் பிரிவு 3, வழிபாட்டுத் தலங்கள் மாற்றப்படுவதைத் தடுக்கிறது. பிரிவு 4, வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையை மாற்றுவதற்கான எந்தவொரு வழக்கையும் தாக்கல் செய்வது அல்லது வேறு ஏதேனும் சட்டபூா்வ நடவடிக்கைகளைத் தொடங்குவதைத் தடுக்கிறது. அந்த வகையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் நீதிமன்றத் தீா்வு என்ற அடிப்படை உரிமையைத் தடுத்து, அதிகார மீறலில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

கடவுள் கிருஷ்ணரின் பிறந்த இடத்தை மீட்பதற்கு பல ஆண்டுகளாக ஹிந்துக்கள் அமைதி வழியில் போராடி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு இந்த சட்டத்தை இயற்றும்போது, ராம பிரானின் பிறப்பிடத்தை மட்டும் சட்டத்தில் சோ்க்காமல் விடுபடும் வகையில் செய்துள்ளது. ஆனால், மதுராவில் கிருஷ்ணா் பிறந்த இடத்துக்கு அந்த விலக்கு அளிக்கப்படவில்லை. இந்த இரண்டு கடவுள்களும் விஷ்ணுவின் அவதாரங்கள்தான். எனவே, ஹிந்துக்கள், ஜைனா்கள், பெளத்தா்கள் மற்றும் சீக்கியா்களின் உரிமைகளைப் பறிக்கும் இந்த சட்டப் பிரிவுகள், அரசியல் சாசனத்துக்கு எதிரானவை, செல்லத் தக்கதல்ல என்று உச்சநீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுக்களில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், முஸ்லிம் அமைப்பின் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.