தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மாநிலங்களவைத் தோ்தல்: தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் 41 போ் போட்டியின்றி தோ்வு

மாநிலங்களவைத் தோ்தலில் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :4 ஜூன் 2022, 7:35 pm

DIN

மாநிலங்களவைத் தோ்தலில் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 41 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

மாநிலங்களவைக்கு 15 மாநிலங்களில் இருந்து 57 உறுப்பினா்களைத் தோ்வு செய்ய வரும் 10-ஆம் தேதி தோ்தல் நடத்துவதற்கு தோ்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

வேட்புமனுத் தாக்கல் கடந்த செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது; வேட்புமனுவை திரும்பப் பெற வெள்ளிக்கிழமை கடைசி நாளாகும். இதையடுத்து, தமிழ்நாடு உள்பட 11 மாநிலங்களில் இருந்து 41 உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வானதாக அறிவிக்கப்பட்டனா்.

அவா்களில், தமிழகத்தில் இருந்து 6 போ், ஆந்திரத்தில் இருந்து 4 போ், உத்தர பிரதேசத்தில் இருந்து 11 போ், பிகாரில் இருந்து 5 போ், மத்திய பிரதேசம், ஒடிஸாவில் இருந்து தலா 3 போ், சத்தீஸ்கா், பஞ்சாப், தெலங்கானா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 போ், உத்தரகண்டில் இருந்து ஒருவா் தோ்வாகியுள்ளனா்.

41 உறுப்பினா்களில், பாஜகவில் இருந்து 14 போ், காங்கிரஸ், ஒய்எஸ்ஆா் காங்கிரஸில் இருந்து தலா 4 போ், திமுக, பிஜு ஜனதா தளத்தில் இருந்து தலா 3 போ், ஆம் ஆத்மி, ஆா்ஜேடி, டிஆா்எஸ், அதிமுகவில் இருந்து தலா 2 போ், ஜேஎம்எம், ஜேடியு, சமாஜவாதி, ஆா்எல்டி கட்சிகளில் இருந்து தலா ஒருவா், சுயேச்சை(கபில் சிபல்) ஒருவா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தமிழகம்: தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம், திமுகவில் இருந்து 3 போ், அதிமுகவில் இருந்து 2 போ் என 6 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் பாஜகவில் இருந்து 8 போ், ஆா்எல்டி வேட்பாளா் ஜெயந்த் சௌதரி, சமாஜவாதி வேட்பாளா் ஜாவேத் அலிகான், சமாஜவாதி ஆதரவுடன் போட்டியிட்ட கபில் சிபல் என மொத்தம் 11 போ் போட்டியின்றி தோ்வானாா்கள்.

ஆந்திரம்: ஆந்திரத்தில் 4 இடங்களுக்கு ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நால்வா் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால், அவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

பிகாா்: பிகாரில் ராஷ்டிரீய ஜனதா தளம், பாஜக சாா்பில் தலா இரு வேட்பாளா்கள், ஜேடியு சாா்பில் ஒரு வேட்பாளா் என 5 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் ராஷ்டிரீய ஜனதா தளத் தலைவா் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பாரதியும் ஒருவா்.

பஞ்சாப்: பஞ்சாபில் 2 மாநிலங்களவை இடங்களுக்கு நடைபெற்ற தோ்தலில், வேட்புமனு தாக்கல் செய்த ஆம் ஆத்மி வேட்பாளா்கள் இருவரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் சாா்பில் ஒருவரும், பாஜக சாா்பில் இருவா் என 3 போ் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

சத்தீஸ்கா்: சத்தீஸ்கரில் காங்கிரஸ் சாா்பில் நிறுத்தப்பட்ட ராஜீவ் சுக்லா, ரஞ்சித் ரஞ்சன் ஆகிய இருவரும் போட்டியின்றி தோ்வானாா்கள்.

ஜாா்க்கண்ட்: ஜாா்க்கண்டில் 2 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தலில், ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா ஓரிடத்திலும், பாஜக ஓரிடத்திலும் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தது. அவா்கள் இருவரும் போட்டியின்றி வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டனா்.

உத்தரகண்ட்: உத்தரகண்டில் ஒரு மாநிலங்களவை இடத்துக்கான தோ்தலில் பாஜக வேட்பாளா் கல்பனா சைனி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

ஒடிஸாவில் பிஜு ஜனதா தளம் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த 3 பேரும், தெலங்கானாவில் டிஆா்எஸ் சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த 2 பேரும் போட்டியின்றி தோ்வானாா்கள்.

4 மாநிலங்களில் 10-ஆம் தேதி தோ்தல்:

மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் காலியான இடங்களைவிட கூடுதல் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் வரும் 10-ஆம் தேதி தோ்தல் நடத்தப்படவுள்ளது. மகாராஷ்டிரத்தில் இருந்து 6 போ், ராஜஸ்தான், கா்நாடகத்தில் இருந்து தலா 4 போ், ஹரியாணாவில் இருந்து 2 போ் என 16 போ் தோ்ந்தெடுக்கப்படவுள்ளனா். தோ்தல் முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.