சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது 

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
Updated On :5 ஜூன் 2022, 6:46 am

DIN

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தோழியுடன் மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார். அவரது தோழி விரைவாகச் சென்றுவிட, சிறுமி அங்கிருந்த சிறுவர்களுடன் பேசியுள்ளார். அவர்கள் சிறுமியை காரில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அப்போது காரிலேயே அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இரு தினங்களுக்குப் பிறகு சிறுமி இதுகுறித்து தன் தந்தையிடம் கூறவே, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், நேற்று சாதுதீன் மாலிக் என்ற மாணவரை கைது செய்தனர்.  இதையடுத்து ஒமர் கான் மற்றும் இன்னொருவர் மாணவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியை கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

ஓடும் காரில் சிறுமி ஒருவரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.