மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

News image

யூ-டியூப் பார்த்து இதையா கற்றுக் கொள்வது? கைது செய்தது காவல்துறை

Updated On :6 ஜூன் 2022, 11:44 am

ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டில் பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தோடா மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி லஷ்கர் இயக்கத்தைச் சேர்ந்த முகமது அமீன் எனத் தெரிய வந்தது. பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு, செனாப் பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதத்தைப் புதுப்பிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். 

தோடா மாவட்டத்தின் தண்டல்-கஸ்திகர் பகுதியில் காவல்துறை, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது இர்ஷாத் அகமது கைது செய்யப்பட்டதாக ஜம்மு மண்டல கூடுதல் காவல்துறை இயக்குநர் முகேஷ் சிங் தெரிவித்தார்.

தேடுதல் நடவடிக்கையின்போது, கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து வெடிகுண்டு, தொலைபேசி மற்றும் பிற பயங்கர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.