விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மும்பையில் கரோனா அலையா? புதிய கட்டுப்பாடுகள் வருமா?

நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image

மும்பையில் கரோனா அலையா? புதிய கட்டுப்பாடுகள் வருமா?

Updated On :7 ஜூன் 2022, 7:46 am


மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் திடீரென கரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதையடுத்து, நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மாநில அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தில் திங்கள்கிழமை 1,036 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையன்று, வாராந்திர கரோனா பாதிப்பு சராசரி ஆயிரத்தைக் கடந்தது.

கடந்த பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு, 7 நாள் கரோனா பாதிப்பு சராசரி முதல் முறையாக அதிகரித்துள்ளது. இதற்கு ஒமைக்ரான் வகை கரோனா வைரஸ் பரவி வருவதே காரணம் என்றும் கூறப்படுகிறது. அதுபோல, பிப்ரவரி 13ஆம் தேதிக்குப் பிறகு, கரோனா தொற்று உறுதி செய்யப்படும் விகிதமானது 4.25% ஆகவும் உயர்ந்துள்ளது.

ஒருபக்கம் கரோனா பாதிப்பு அதிகரித்தாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் அளவு குறைவாகவே இருப்பதாக மாநில சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

மாநிலத்தில் தற்போது கரோனா உறுதி செய்யப்படுவோரில் 1 சதவீதம் பேர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே, கரோனா தொற்றின் தீவிரம் குறைவாகவே இருப்பதால் அச்சப்பட ஒன்றும் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் தெரிவித்துள்ளார்.

மும்பையில் மட்டும் நேற்று 676 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் இது 60 - 70 சதவீதமாக உள்ளது. மாநில அளவில் கரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரிக்கையில், மும்பையிலும் பாதிப்பு கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

மாநில அளவில் கடந்த ஒரு வாரத்தில் ஒட்டுமொத்த பாதிப்பில் மும்பையின் சராசரி 67.28 சதவீதமாக உள்ளது. எனவே, கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் பகுதிகளில் பரிசோதனையை தீவிரப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.