யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: புதுக்கோட்டை இளைஞர் கைது

ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரை உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை

News image
Updated On :7 ஜூன் 2022, 4:23 pm

DIN


ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞரை உத்தரப் பிரதேச பயங்கரவாத தடுப்புப் படை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

உத்தரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 6 ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக லக்னெள காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உத்தரப் பிரதேசத்தின் இரண்டு ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்கள் உள்பட 6 ஆர்.எஸ்.எஸ். கிளை அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஜூன் 7ஆம் தேதி  தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.  அவரது பெயர் ராஜ் முகமது, என குறிப்பிடப்பட்டுள்ளது. 

 ஆர்எஸ்எஸ் அலுவலகங்களில் குண்டுவெடிப்பு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுவின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்னெள காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.