தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

அஸ்ஸாமில் நாளை மாற்றியமைக்கப்படும் அமைச்சரவை

அஸ்ஸாமில் அமைச்சரவை நாளை (ஜூன் 9) மாற்றியமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப் படம்
Updated On :8 ஜூன் 2022, 12:32 pm

DIN

அஸ்ஸாமில் அமைச்சரவை நாளை (ஜூன் 9) மாற்றியமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, “ நாளை (ஜூன் 9) குவஹாட்டியில் ஸ்ரீமந்த சங்கரதேவ் சர்வதேச அரங்கத்தில் மதியம் 3 மணியளவில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெறும். அதில் பாஜகவைச் சேர்ந்த 2 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்” என்றார்.

முன்னதாக அஸ்ஸாம் மாநில முதல்வர், மலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அமைச்சரவையில் இடம் பெறுவார் எனக் கூறியிருந்தார். முதல் முறையாக ஹிமந்தா பிஸ்வாஷ் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படுகிறது. ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா கடந்த ஆண்டு மே 10ஆம் நாளில் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வர் ஹிமந்தா பிஸ்வாஷ் சர்மா நேற்று (ஜூன் 7) துணை ஆணையர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு விரைவில் வரவிருக்கிற துணை ஆணையர்கள் மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.