பிகாரில் ஓடும் ரயிலில் பயணிகளிமிருந்து செல்லிடப்பேசி, பணம் முதலியவற்றை ஸ்பைடர்மேன் பாணியில் திருடும் திருடனின் விடியோ வைரலாகி வருகிறது.
ஸ்பைடர்மேன் பாணியில் ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளிடம் திருடும் இந்த திருடனின் விடியோ இணையத்தில் பலமுறை பகிரப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பிகாரில் அரங்கேறியுள்ளது.
வைராலாகி வரும் அந்த விடியோவில் இருப்பதாவது, “ ரயில் படிக்கட்டில் இருவர் அமர்ந்து வெளிப்புறம் வேடிக்கை பார்த்தவாறு பயணம் செய்து வருகின்றனர். ரயில், பாலத்தின் மீது சென்று கொண்டிருக்கிறது. திடீரென படியில் அமர்ந்து இருந்த இரண்டு பேரில் ஒருவர் குழப்பமாக பார்க்கிறார். பின்னர், அந்த விடியோவினை மெதுவாக பார்க்கும்போது பாலத்தில் இருந்து ஒருவர் அந்த பயணியிடம் இருந்த செல்லிடப்பேசியை கண் இமைக்கும் நேரத்தில் பிடுங்கி விடுகிறார். தனது செல்லிடப் பேசி பறிபோனதை சற்று தாமதமாகவே அந்த பயணி உணர்கிறார். இவ்வாறாக அந்த விடியோ முடிவு பெறுகிறது.
#Breaking
â Capt. Kanika Bhardwaj (@capt_kanika) June 9, 2022
New spider man found on Indian railways bridge in Bihar.
à¤à¤²à¤¤à¥ à¤à¥à¤°à¥à¤¨ सॠमà¥à¤¬à¤¾à¤à¤² à¤à¤ªà¤ लिया #बिहार pic.twitter.com/qnerokQIaF
”
இந்த விடியோவானது பல்வேறு சமூக ஊடகங்களின் வாயிலாக இணையத்தில் வலம் வந்தது. பலரும் இந்த விடியோவில் இருக்கும் திருடனை ஸ்பைடர்மேன் என ஆச்சர்யமாகக் கூறி வருகின்றனர். சிலர் ரயில் பயணங்களில் இது போன்ற பாலத்தின் மீது செல்லும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மஆலிமுஸ் ஸுன்னத்தின் நபவிய்யா-பாகம் 2

தெய்வப்புலவர் திருவாய்மொழி (திருக்குறள் விளக்கவுரை)

வரப்பெற்றோம் (03-08-2026)

நெல்லையில் பூத்த சேனைக்கிழங்கு பூ! வியந்து பார்க்கும் மக்கள்!!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



