மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மகாராஷ்டிரத்தை 2 நாள்களில் நெருங்கும் பருவமழை

நாட்டில் பருவமழையானது படிப்படியாகத் தொடங்குவதாகவும், மகாராஷ்டிரத்தில் இன்றும் இரண்டு நாள்களில் பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மகாராஷ்டிரத்தை 2 நாள்களில் நெருங்கும் பருவமழை

Updated On :9 ஜூன் 2022, 12:51 pm

புது தில்லி: நாட்டில் பருவமழையானது படிப்படியாகத் தொடங்குவதாகவும், மகாராஷ்டிரத்தில் இன்றும் இரண்டு நாள்களில் பருவமழை தொடங்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அருணாசலப் பிரதேசத்தில் வரும் 10 - 11ஆம் தேதிகளில் மிக அதிகனமழை (204.5 மிமீக்கும் மேல்)பெய்யும் அபாயம் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல அசாம், மேகாலயம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மே 29ஆம் தேதி கேரளத்தை பருவமழை தொட்டுவிட்டது. மே 31ஆம் தேதி முதல் ஜூன் 7 வரையிலான காலக்கட்டத்தில் தென் மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதி, கேரளம், கர்நாடகத்தின் ஒரு சில பகுதிகள், தமிழகத்திலும் பருவமழை பரவத் தொடங்கியது.

பருவமழை தொடங்குவதில் எந்த தாமதமும் இல்லை. படிப்படியாக பருவமழை தொடங்கி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.