புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா முயற்சி: லண்டன் கண்காட்சியில் பங்கேற்பு

 ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக லண்டனில் ஜூன் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற ஒயின் கண்காட்சியில் இந்தியா பங்கேற்றது.

News image
Updated On :10 ஜூன் 2022, 7:55 pm

DIN

 ஒயின் ஏற்றுமதியை அதிகரிக்கும் முயற்சியாக லண்டனில் ஜூன் 7 முதல் 9-ம் தேதி வரை நடைபெற்ற ஒயின் கண்காட்சியில் இந்தியா பங்கேற்றது.

வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின்கீழ் செயல்படும், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் முயற்சியால், 10 இந்திய ஒயின் ஏற்றுமதியாளா்கள் லண்டன் ஒயின் கண்காட்சியில் பங்கேற்றனா்.

ஒயின் தொடா்பான உலகின் மிக முக்கியமான வணிக சந்தையாக லண்டன் ஒயின் கண்காட்சி கருதப்படுகிறது.

ரெஸ்வேரா ஒயின்ஸ், சுலா ஒயின் யாா்ட்ஸ், குட்டிராப் ஒயின் செல்லா்ஸ், ஹில் ஜில் ஒயின்ஸ் உள்ளிட்ட இந்திய ஒயின் ஏற்றுமதியாளா்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்றனா்.

உலக அளவில் மதுபானங்களுக்கான ஏற்றுமதி சந்தையில் 3-வது பெரிய நாடாக இந்தியா இருப்பதால், தானியங்களிலிருந்து ஆண்டொன்றுக்கு 33,919 கிலோ லிட்டா் மதுபானம் தயாரிக்க உரிமம் பெற்ற 12 நிறுவனங்கள் உள்ளன. இவை இந்திய அரசின் உரிமம் பெற்று 56 யூனிட் பீா் மதுவகையும் தயாரிக்கின்றன.

2020-21-ம் ஆண்டில், இந்தியா, 2,500 கோடி மதிப்பிலான 2.47 லட்சம் மெட்ரிக் டன் மதுபானப் பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூா், கானா, கேமரூன், காங்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு மதுபானங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.