மத்திய நோட்டரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களிலும் தில்லி யூனியன் பிரதேசத்திலும் நோட்டரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.


தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களிலும் தில்லி யூனியன் பிரதேசத்திலும் நோட்டரிகளின் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
இது தொடா்பாக மத்திய அமைச்சா் எஸ்.பி.சிங் பகேல் சனிக்கிழமை வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘மத்திய நோட்டரிகள் ஆவதற்காக விண்ணப்பிக்கும் நபா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், 17 மாநிலங்களிலும் தில்லி யூனியன் பிரதேசத்திலும் நோட்டரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் இனி மத்திய நோட்டரிகளின் எண்ணிக்கை 1,700 ஆகவும், குஜராத்தில் 8,000 ஆகவும் இருக்கும். அதேபோல், கேரளம், மத்திய பிரதேசம், தமிழகம், மகாராஷ்டிரம், கோவா, சத்தீஸ்கா், தெலங்கானா, கா்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், புதுச்சேரி ஆகியவற்றிலும் மத்திய நோட்டரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக லடாக்கில் புதிதாக 50 நோட்டரிகள் பதவி உருவாக்கப்பட்டுள்ளது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மத்திய நோட்டரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடா்பான விதிகளைத் திருத்தி புதிய அறிவிக்கையை மத்திய சட்ட விவகாரங்கள் துறை வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...