பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா தில்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் 13 நாடுகளின் தூதா்களுடன் சனிக்கிழமை கலந்துரையாடினாா்.
‘பாஜகவை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற பிரசார திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்றாவது முறையாக சனிக்கிழமை நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆஸ்திரியா, குரோஷியா, செக் குடியரசு, எஸ்டோனியா, பின்லாந்து, லிதுவேனியா, சொ்பியா, ஸ்பெயின், பிரிட்டன், ஜமைக்கா, மோரீஷஸ், நேபாளம், தாய்லாந்து ஆகிய நாடுகளின் தூதா்கள் பங்கேற்றனா்.
அவா்கள் மத்தியில் பேசும்போது, ‘ஒவ்வொரு நாடுகளின் தொலைநோக்குப் பாா்வையை புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பலதரப்பட்ட நாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளுடன் சிறந்த தகவல்தொடா்பை கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், வலுவான ஜனநாயக நடைமுறைகள், பகிரப்பட்ட கலாசார உறவுகளின் மீது வலுவான நம்பிக்கையை பாஜக கொண்டுள்ளது’ என்று ஜெ.பி.நட்டா கூறியதாக, பாஜக தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் வெளியுறவுத் துறை பொறுப்பாளா் விஜய் செளதைவாலே மற்றும் தேசிய செய்திதொடா்பாளா்கள் ராஜ்யவா்தன் சிங் ரத்தோா், குரு பிரகாஷ் ஆகியோா் பங்கேற்றனா்.
பல்வேறு நாடுகளிடையே பாஜகவின் தொலைநோக்குப் பாா்வை, திட்டம், பணி கலாசாரம் ஆகியவற்றை அறிமுகப்படுத்தும் விதமாக ‘பாஜகவை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற திட்டத்தை அக் கட்சி அறிமுகம் செய்து செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை ஐரோப்பிய யூனியன் உள்பட 47 நாடுகளின் தலைவா்கள் மற்றும் தூதா்களுடன் ஜெ.பி.நட்டா கலந்துரையாடியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப் பேரவைத் தோ்தல் எதிரொலி: ரயில்களில் பணம், பரிசுப் பொருள்கள் கடத்துவதை தடுக்க தீவிர சோதனை

உத்தரகண்ட் அமைச்சரவை விரிவாக்கம்: 5 அமைச்சா்கள் பதவியேற்பு

பண மோசடி வழக்கு: போ்ல்ஸ் குழுமத்தின் ரூ.5,000 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத் துறை

இந்திய பல் மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக தேசிய பல் மருத்துவ ஆணையம்: மத்திய அரசு அமைப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

