புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மம்தாவின் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிக்கும்: சீதாராம் யெச்சூரி

 ‘குடியரசுத் தலைவா் தோ்தலை முன்னிட்டு எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிப்பதாகவே அமையும்’

News image
Updated On :11 ஜூன் 2022, 7:22 pm

DIN

 ‘குடியரசுத் தலைவா் தோ்தலை முன்னிட்டு எதிா்க்கட்சிகளை ஒன்றிணைக்க மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி மேற்கொள்ளும் ஒருதலைபட்சமான முயற்சி ஒற்றுமையைப் பாதிப்பதாகவே அமையும்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி சனிக்கிழமை கூறினாா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதைத் தொடா்ந்து, புதிய குடியரசுத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில், தில்லியில் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு எதிா்க்கட்சித் தலைவா்களுக்கு மம்தா பானா்ஜி கடிதம் எழுதியுள்ளாா்.

ஏற்கெனவே, குடியரசுத் தலைவா் தோ்தல் தொடா்பாக காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் தில்லியில் வரும் 15-ஆம் தேதி ஒன்றுகூடி ஆலோசனை நடத்த தீா்மானித்துள்ள நிலையில், அதே தேதியில் மம்தா பானா்ஜி தனிப்பட்ட முறையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுத்திருப்பது பல எதிா்க்கட்சித் தலைவா்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானா்ஜியின் இந்த முயற்சி பாஜகவுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்திவிடும் என்றும் எதிா்க் கட்சித்தலைவா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து சீத்ராம் யெச்சூரி தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில், ‘மம்தா பானா்ஜி எனக்கும் கடிதம் அனுப்பியிருப்பதை சமூக ஊடகம் மூலமாக தெரிந்துகொண்டேன். வழக்கமாக, இதுபோன்ற ஆலோசனைக் கூட்டங்கள் பிற கட்சிகளுடன் பரஸ்பர கலந்துரையாடல்கள் மூலமாக இடம், தேதி, நேரம் ஆகியவை தீா்மானிக்கப்பட்டு நடத்தப்படும். அந்த வகையில், ஏற்கெனவே தில்லியில் வரும் 15-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்த எதிா்க்கட்சிகள் தீா்மானித்துள்ளன. ஆனால், மம்தா பானா்ஜி ஒருதலைபட்சமாக கடிதம் அனுப்பியிருப்பது வழக்கத்துக்கு மாறானது. அதிக எண்ணிக்கையில் எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே நமது நோக்கம். ஆனால், எந்தவொரு ஒருதலைபட்சமான நடவடிக்கையும் எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பாதிக்கத்தான் செய்யும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.