சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

வருமான வரிக் கணக்குத் தாக்கல் அதிகரிப்பு

கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 2022ஆம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜூன் 2022, 12:25 pm


பனாஜி:  கடந்த நிதியாண்டைக் காட்டிலும் 2022ஆம் நிதியாண்டில், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய (சிபிடிடி) தலைவர் சங்கீதா சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்த நிலையில், அது தற்போது 7.14 கோடியாக அதிகரித்திருப்பதன் மூலம், வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதையே காட்டுகிறது என்றார்.

வழக்கமாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போதுதான், வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது வழக்கத்தைக் காட்டிலும் வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம், அதிகமான விற்பனை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.